இப்படி ஒரு உணவு வகை இருக்கா ? ஆடிப்போன வாடிக்கையாளர்கள்!

டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள மிச்செலின் ஸ்டார் உணவகத்தில் பரிமாறப்பட்ட வித்தியாசமான மெனு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பலரும் சாப்பிட விரும்பாத உணவு வகைகள் பரிமாறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த உணவகத்தில் 700 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.59,000) செலுத்தி சாப்பிட்ட ஒரு பெண் வித்தியாசமான உணவுகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது மிச்செலின் உணவகத்தில் பட்டாம்பூச்சி, பூச்சிகள் மூலம் சமைக்கபப்ட்டு உணவு பன்றி மற்றும் மானின் இரத்தத்தால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள், ஆட்டுக்குட்டி மூளை மௌஸ், பூச்சி ஐஸ்கிரீம், ஜெல்லி மீன் சூப், சவப்பெட்டி வடிவிலான சாக்லேட், மீன்களின் முட்டை மற்றும் கோழி தலை ஆகியவை மெனுவில் உள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
பெண் பகிர்ந்த இந்த மெனு இணையத்தில் வைரலாகி வருகிறது. ''டென்மார்க்கின் அல்கெமிஸ்ட் கோபன்ஹேகனில் மிச்செலின் உணவகத்தில் எனது 5 மணி நேர, $700 மெனுப்பட்டியல் இதோ'' என்று அந்த பெண் கூறியுள்ளார். இந்த இனிப்புப் பதார்த்தத்தில் பன்றி மற்றும் மான் இரத்தத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இரத்தத் துளி உபசரிப்பு இருந்தது. “இது சற்று உலோகச் சுவையுடன் இருந்தது,” என்று அவர் கூறினார்.
“பூஞ்சை, பட்டாம்பூச்சிகள், ஜெல்லிமீன்கள், உயிருள்ள பூச்சிகள், ஆட்டுக்குட்டி மூளை, கோழி கால்கள், கோழி தலை என மெனு பட்டியலே பயங்கரமாக இருக்கிறது. இதை எப்படி சாப்பிடுகிறார்கள்? என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை'' என்று பெரும்பாலோனோர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.