1. Home
  2. தமிழ்நாடு

அகவிலைப்படி உயர்வு இல்லையா? - தமிழக அரசு அறிவிப்பால் பரபரப்பு !!

அகவிலைப்படி உயர்வு இல்லையா? - தமிழக அரசு அறிவிப்பால் பரபரப்பு !!


31 சதவீத அகவிலைப்படி உயர்வு என்பது, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு பொருந்தாது என தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. அதன்படி, அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்ந்தது. இதன்மூலம் மாநில அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அதில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பணியாளர்கள் ஆவர்.

தமிழக அரசின் அகவிலைப்படி உயர்வானது நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தும். எனவே தினக்கூலி ஊழியர்கள், தொகுப்பூதிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு இல்லையா? - தமிழக அரசு அறிவிப்பால் பரபரப்பு !!

அதில், அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் ஒரு லட்ச ரூபாய் அல்லது அதற்கு மேல் உதவித்தொகை நிர்ணய வருமானம் பெறும் கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இது கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவின் படி, பகுதி நேர ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பொருந்தாது.
இந்த உத்தரவை அனைத்து சார்நிலை அலுவலர்களும் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like