பேச்சாளர்களுக்கா பஞ்சம்? திமுக மேடையில் ரங்கராஜ் பாண்டே எதற்கு? ப்ளூ சட்டை மாறன்!

சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக்கு பகுதி திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பத்திரிகையாளர்களுக்கான இந்து என்.ராம், நக்கீரன் கோபால், ரங்கராஜ் பாண்டே, கல்கி பிரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரங்கராஜ் பாண்டே திமுக, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இந்த நிலையில் திமுக மேடையில் பாஜக ஆதரவாளராக கருதப்படும் ரங்கராஜ் பாண்டேவை பேச வைத்தது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளது. திமுக மேடையில் பேச பேச்சாளர்களுக்காக பஞ்சம்? எனவும், ரங்கராஜ் பாண்டே பேச வைத்தது ஆரிய மாடலுக்கு மேடை அமைத்து தந்தது போல என விமர்சித்துள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"ஆரிய மாடலுக்கு மேடையமைத்து தந்து மகிழும் திராவிட மாடல்.. சில மாதங்களுக்கு முன்பு திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் நூல் வெளியீட்டில் ரஜினியை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அதில் ஸ்டாலினும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு சம்மந்தமே இல்லாமல்.. சீனியர் திமுக அமைச்சர்களை கிண்டல் செய்தார் ரஜினி. பிறகு துரைமுருகன் பதிலடி தந்தார். சில வாரங்களுக்கு முன்பு வடிவேலுவை மேடையேற்றி விட்டார் சேகர்பாபு. வடிவேலுவை மீண்டும் வளர்த்துவிட வேண்டிய அவசியம் இல்லை என்பது குறித்து சமீபத்தில் எழுதி இருந்தோம்.
இப்போது இந்த ரங்கராஜை மேடையேற்றி இருக்கிறார் மா.சுப்ரமணியம். வாயை திறந்து இவர் பேசிய முதல் வார்த்தை.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதன்பிறகு.. நான் அரசியலில் எவ்வளவு பெரிய அப்பாடக்கர் தெரியுமா எனும் ரீதியில் பில்ட் அப்களை அள்ளிவிட்டார். இவரை நம்பித்தான் முதல்வரும், அமைச்சர்களும் உள்ளனர் என்பது போல பேசினார். விவாத நிகழ்ச்சி நடத்துவதில் இவர் ஒரு சூரப்புலி என எண்ணி பலரும் ஃபயர் விட்ட காலமுண்டு. ஆனால் ஒரு கட்டத்தில் அதே நிகழ்ச்சிகளில் தனது சங்கித்தனத்தை காட்ட ஆரம்பித்தார். பிறகு நெற்றியில் காவித்திலகமிட துவங்கினார். யூட்யூப் பக்கம் கரை ஒதுங்கினார். இவரது அனைத்து பேச்சுகளும் தமிழ் மற்றும் தமிழர் நலனுக்கு எதிரானவை. இவர் ஒரு அக்மார்க் சங்கி என்பது ஊரறியும். ரஜினி, வடிவேலு, ரங்கராஜ் போன்றோரை எல்லாம் பழகிய தோஷத்திற்காக.. வீட்டில் நடக்கும் சுக, துக்க நிகழ்வுகளுக்கு அழைப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கண்டால் வணக்கம் வைத்து விட்டு கிளம்பிவிட வேண்டும்.
அதைவிட்டுவிட்டு இப்படி திமுக மேடையில் பேசவிடுவது, அளவுக்கு மீறிய நட்பு பாராட்டுவதெல்லாம் தேவையற்ற வேலை. இதையெல்லாம் நீங்கள் தெரியாமல் செய்வதாக தெரியவில்லை. வருங்காலத்தில் பாஜக கூட்டணிக்கு அடிக்கல் நாட்டுவதாகவே தெரிகிறது. ரங்கராஜ் உங்கள் மேடைகளில் பேசுவதால் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு ஏறப்போவதில்லை. அவருக்கு நீங்கள் என்ன ராஜ மரியாதை செய்தாலும்.. தனது விஸ்வாசத்தை பாஜகவிற்கு மட்டுமே காட்டுவார்.
திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்கிறீர்கள். ஆம். ஒரு சிறு திருத்தம். வெளியில் இருந்து எந்த கொம்பனும் வரவேண்டாம். இப்படியான நபர்களுக்கு மேடை அமைத்து கொடுத்து.. உங்களை நீங்களே அசைத்து கொள்கிறீர்கள். ரவீந்திரன் துரைசாமி, கங்கை அமரன் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். அவர்களையும் மேடையேற்றி அழகு பாருங்கள். திமுக மேடைகளில் பேச உங்கள் கட்சியில் பேச்சாளர்களுக்கா பஞ்சம்? இதுவரை மேடையில் பேசாத தொண்டர்களில் சிறப்பாக பேசுவோரை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமே?" என கூறியுள்ளார்.
ஆரிய மாடலுக்கு மேடையமைத்து தந்து மகிழும் திராவிட மாடல்:
— Blue Sattai Maran (@tamiltalkies) March 11, 2025
* சில மாதங்களுக்கு முன்பு திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் நூல் வெளியீட்டில் ரஜினியை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அதில் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
* நிகழ்ச்சிக்கு சம்மந்தமே இல்லாமல்.. சீனியர் திமுக அமைச்சர்களை கிண்டல்… pic.twitter.com/Nucyuusr8L