புது கூட்டணி அமைகிறதா..?முதல்வர் ஸ்டாலினுடன் 2வது முறையாக ஓபிஎஸ் சந்திப்பு..!
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று காலை நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதன் பிறகு, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் ஓ.பி.எஸ்., தரப்பு அறிவித்தது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் ஓபிஎஸ் மீண்டும் உடன் இருந்தார். அவருடன், மகன் ரவிந்திரநாத், முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவர்களை, துணை முதல்வர் உதயநிதி வாசல் வரை வந்து வரவேற்றார்.
முதல்வருடன் அரை மணி நேரம் சந்தித்து பேசியபின் ஓபிஎஸ் கூறியதாவது:
மரியாதை நிமித்தமாகவே முதல்வரை சந்தித்தேன். மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ள அவரிடம் உடல் நலம் விசாரித்தேன். அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரிகளும் இல்லை என கூறினார்.
.png)