1. Home
  2. தமிழ்நாடு

இப்படிகூட ஒரு தாய் இருப்பாங்களா..? யூடியூபருக்கு நிதி வழங்க 2 மகன்களை விற்ற கொடூர தாய்..!

1

சீனாவை சேர்ந்தவர் ஹுவாங்.இவர் சிறு வயதாக இருந்தபோதே அவரது பெற்றோர் அவரை தவிக்க விட்டு விட்டு சென்று விட்டனர். இதன் காரணமாக பிள்ளை இல்லாத தம்பதி அவரை தத்தெடுத்து வளர்த்தனர். அவர்களும் குழந்தையை சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் தனது சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய ஹுவாங், தனது இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். முறையான படிப்பையும் அவர் கற்கவில்லை. இதனால் பாய் ஃப்ரெண்ட்ஸ் சகவாசம் என அவரது வாழ்க்கையே சீரழிந்து போனது. இந்தச் சூழலில் கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் அவருக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது.ஆனால் அந்த குழந்தையை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் ஹுவாங். இதனால் அந்த குழந்தையை விற்று விட வேண்டுமென அவர் முடிவு செய்தார். ஹுவாங்கின் இந்த முடிவை அவரது வீட்டு உரிமையாளர் தெரிந்து கொண்டார். அதன் பின்னர் தனது உறவினர் ஒருவருக்கு ஹுவாங்கை அறிமுகம் செய்து அந்த குழந்தையை அவரிடம் விற்று விடுமாறு வீட்டு உரிமையாளர் அறிவுறுத்தினார்.

அதன்படி இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய்க்கு அந்தக் குழந்தையை கல் நெஞ்சம் படைத்த ஹுவாங் விற்பனை செய்தார். இதற்கிடையே யூட்யூப்க்கு அடிமையான ஹுவாங், யூடியூபில் வரும் யூட்யூபர்களுக்கு நிதி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் தனது மூத்த மகனை விற்பனை செய்த 5 லட்ச ரூபாயை யூடியூபர்களுக்கு தாராளமாக வழங்கினார்.அதன் பின்னர் அந்த பணம் தீர்ந்து போனதால், அடுத்ததாக மீண்டும் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள ஹுவாங் முடிவு செய்தார்.

இதற்காக மீண்டும் அவர் ஒரு ஆண் துணையை அணுகி, கடந்த 2022 ஆம் ஆண்டில் இரண்டாவதாக ஒரு பையனை பெற்றெடுத்தார். பின்னர் அந்த சிறுவனையும் 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தார். இந்தச் சூழலில் தான் வழக்கு விசாரணை ஒன்றில் போலீசாரிடம் ஹுவாங் சிக்கினார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மேற்கண்ட தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து போலீசார் ஹுவாங்கை கைது செய்து அவரால் விற்பனை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இதை தொடர்ந்து ஹுவாங் சீன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஹுவாங்கின் கொடூர முகத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு 5 ஆண்டுகள், இரண்டு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

Trending News

Latest News

You May Like