நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!
தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த மாதம் 31ஆம் தேதி வியாழக்கிழமை தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்தது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று, நவம்பர் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை தமிழக அரசு விடுமுறையாக அறிவித்தது. அதற்குப் பதிலாக நவம்பர் 9ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதும் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்று தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்பட்ட நிலையில், அதனை ஈடு செய்ய நாளை தமிழகம் முழுவதும் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.