1. Home
  2. தமிழ்நாடு

இனி அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கா? - தமிழ்நாடு அரசு சொல்வதென்ன..?

1

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. தற்போது நிலவரப்படி 222 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அறிவிப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:- இது பழைய வீடியோ. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாக பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like