1. Home
  2. தமிழ்நாடு

1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வருகிறதா ?

1

2,000 ரூபாய் நோட்டுகள் அண்மையில் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டன. அதன் பிறகு, இந்திய கரன்சி நோட்டுகளில் அதிகம் மதிப்புக் கொண்டதாக 500 ரூபாய் இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், விரைவில் 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளதாக யூகங்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது. 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி இது தொடர்பாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் கரன்சி தேவையை நிறைவேற்றுவதில் புழக்கத்தில் விடப்பட்டு 500 ரூபாய் நோட்டுகளே போதுமானவை என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அதிகரித்து வரும் மின்னணு பரிவர்த்தனைகளால் ரூபாய் நாடுகளின் தேவைக் குறைவதும் இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள காலக்கெடு, கடந்த அக்டோபர் 07- ஆம் தேதி நிறைவுப் பெற்ற நிலையில், இன்னும் ஓரிரு சதவீத நோட்டுக்கள் மட்டுமே மாற்றப்படாமல் உள்ளதாகவும், அவற்றை ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like