மழை குறைந்ததா?.. வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், தமிழகத்தில் 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இரு தினங்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்,பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் .உள் மாவட்டங்களில் ,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில தினங்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவும் .
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு இரு நாட்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
newstm.in