1. Home
  2. தமிழ்நாடு

இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? டாக்டர் ராமதாஸ் விளக்கம்..!

1

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும், சமூக நீதி குறித்து தொடர்ந்து விடாமல் பேசிவருவது பா.ம.க. தான். சமூகநீதி விவகாரத்தில் செய்த தவறுகளை தி.மு.க. திருத்தி அமைக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக அரசு கூறுவது கண்டிக்கதக்கது. அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பீகார், ஆந்திரா, கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இனியும் மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காலம் கடத்தாமல், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும். விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. தேதி வெளியிட்ட பின்னர் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா, போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு நினைத்தால் ஒருவாரத்தில் கட்டுப்படுத்தலாம். காவல்துறைக்கு தெரிந்தேதான் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதால் ஆந்திராவுக்கே சென்று கஞ்சா தோட்டங்களை போலீசார் அழிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like