1. Home
  2. தமிழ்நாடு

பழைய பான் அட்டை செல்லுமா? புதிய பான் அட்டை 2.0க்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

1

மத்திய அரசு இப்போது அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்க முயன்று வருகிறது.அதன்படி இப்போது மத்திய அரசு பான் கார்டுகளை முழுக்க முழுக்க டிஜிட்டல் மாயமாக்க முடிவு செய்துள்ளது.பான் அட்டை 2.0 என்ற அடையாளத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
 

இந்த அட்டையில் க்யூ ஆர் கோடு இடம்பெற்றிருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் பான் அட்டையில் எண், எழுத்து இரண்டும் கலந்து 10 இலக்க அடையாளம் குறியீடாக இருக்கும். இதுவே பான் அட்டை 2ல் க்யூஆர் கோடாக மாற்றப்படுகிறது.
 

இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு டிஜிட்டல் சேவை மேம்படுவதோடு, வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறைக்காக ரூ.1,435 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.

AN 2.0 என்பது நிரந்தர கணக்கு எண் (PAN) அமைப்பின் முக்கியமான அப்கிரேட் ஆகும். வரி செலுத்துவோருக்கு எல்லா விஷயங்களிலும் தடையற்ற டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தில் பான் மற்றும் டான் கார்டுகளின் கோர் மற்றும் நான்- கோர் சேவைகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படும். இது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் இருக்கும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இது இணைக்கப்படும். இதில் பான் தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த போர்டல் இருக்கும். யூசர்களின் தரவைப் பாதுகாக்க மேம்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்பைக் கொண்டிருக்கும். மத்திய அரசு தொடர்பான அனைத்து டிஜிட்டல் தொடர்புகளுக்கான பொதுவான ஒரே அடையாளமாக பான் கார்ட்டை வைத்திருப்பதே இதன் நோக்கமாகும்.

இதில் இடம்பெற உள்ள மிக முக்கிய வசதி என்றால் அது பான் க்யூஆர் கோட்கள் தான். வரி செலுத்துவோர் விவரங்களை விரைவாக அணுகவும் சரிபார்க்கவும் இது உதவும். நாம் எப்படி இப்போது யுபிஐ க்யூஆர் கோட் மூலம் நொடிகளில் கூகுள் பே மூலம் பணம் அனுப்புகிறோமோ.. அதேபோல நொடிகளில் பான் யூசர்களின் தரவுகளை செக் செய்ய முடியும். மேலும், பான் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கப்படுவதால் அதை அணுகவும் ஈஸியாக இருக்கும்.

பழைய அட்டை செல்லுமா? புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? என பல கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய PAN அட்டையில் விரும்பினால் இலவசமாக திருத்தம், அப்டேட் செய்யலாம். அதன்பிறகு புதிய E-PAN மின்னஞ்சல் முகவரிக்கு வருமெனக் கூறியுள்ளது. புதிய PAN அட்டை வேண்டும் எனில், ரூ.50 கட்டினால் வீட்டுக்கே அனுப்பப்படுமென தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like