சூர்யாவின் நீட் அறிக்கையால் சூரரைப் போற்று படத்துக்கு சிக்கலா?

மாணவர்களின் கஷ்டங்களை எடுத்துரைக்கும் விதமாக நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட ஒரு அறிக்கையில் மத்திய மாநில அரசுகளை சரமாரியாக வெளுத்து வாங்கியிருந்தார்.
இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. வேறு நடிகரின் ரசிகர்கள் கூட ரசிகர் சண்டையை மறந்து விட்டு சூர்யாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இது சில அரசியல்வாதிகளை சீற்றமடைய வைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. தளபதி விஜய் அரசியல் கருத்துக்களை பேசும் போது எந்த மாதிரி நெருக்கடி கொடுத்தார்களோ அதையே தற்போது சூர்யாவுக்கும் கொடுக்க முடிவு செய்துவிட்டார்கள் என பேசப்படுகிறது.
விஜய்யின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் படம் வெளிவராமல் இருக்க பல்வேறு விதமான சதிகளை செய்வதைப் போல தற்போது OTTயில் வெளியாக இருக்கும் சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கும் சர்ச்சைகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்களாம்.
பெரும்பாலும் அக்டோபர் 30-ஆம் தேதி அந்த படத்தை வெளியிட முடியாத அளவுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து விடுவார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இருப்பினும் அமேசான் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திடம் இதெல்லாம் எடுபடாது எனவும் சிலர் கூறி வருகின்றனர்.