இன்று ஒரு கிராம் தங்கம் இவ்வளவு தானா.?
சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த வகையில் 3 நாட்களில் 1200 ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. ஆனால் அடுத்த நாளே தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது.
இதனையடுத்து நேற்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக ஒரு கிராம் 7215-க்கும், சவரனுக்கும், சவரன் ரூ 57,720-க்கும் விற்பனையானது. இன்று தங்க வர்த்தக சந்தையின் தொடக்க நாளில் தங்கத்தின் விலையானது எந்தவித மாற்றுமும் இன்றி விற்பனைசெய்யப்படுகிறது.