1. Home
  2. தமிழ்நாடு

இவ்வளவா ? தமிழகத்தில் 1.90 கோடி பேர் நேற்று வாக்களிக்கவில்லை..!

1

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) நடைபெற்றது. 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த முறை தேர்தலில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால் நடந்து முடிந்த வாக்குபதிவில் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். மீதமுள்ள 4 கோடி 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர் வாக்களிக்கவில்லை.

குறிப்பாக வடசென்னையில் வெறும் 60.13 சதவீதம் பேர் தான் வாக்களித்தனர். அதாவது 14 லட்சத்த 96 ஆயிரத்து 224 பேரில், 8 லட்சத்து 99ஆயிரத்து 679 பேர் மட்டுமே வாக்களித்தனர். மீதமுள்ள 5 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் வாக்களிக்கவில்லை.

தென்சென்னை தொகுதியில் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 54.27 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 10 லட்சத்து 97 ஆயிரத்து 954 பேர் வாக்களித்துள்ளனர். 9 லட்சத்து 25 ஆயிரத்து 179 பேர் வாக்களிக்கவில்லை. இதே போல மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர்.இதில் 53.91 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 7 லட்சத்து 27 ஆயிரத்து 871 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 6 லட்சத்து 22 ஆயிரத்து 290 பேர் வாக்களிக்கவில்லை.தொடர் விடுமுறை மற்றும் கடும் வெயில் காரணமாக மக்கள் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விடுமுறை தினத்தில் வாக்குப்பதிவு நடத்தியதால் தான் பலர் வாக்களிக்கவில்லை என பாஜக வேட்பாளர் தமிழிசை கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like