1. Home
  2. தமிழ்நாடு

விவாகரத்து செய்கிறாரா நடிகை ஷில்பா ஷெட்டி..?

1

சினிமாத்துறையில் அதிக விவாகரத்துகள் நடக்கின்றன. இந்தி பட உலகில் ஆரம்பித்த இந்த விவாகரத்து கலாசாரம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகம்வரை நீண்டுள்ளது.இந்தி நடிகர் அமீர்கான், நடிகை சமந்தா, நடிகர் தனுஷ் ஆகியோரை தொடர்ந்து தற்போது நடிகை ஷில்பா ஷெட்டியும் கணவர் ராஜ்குந்த்ராவை விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்து இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது. 

ராஜ் குந்த்ரா - ஷில்பா ஷெட்டியின் வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு ஆபாச படங்களை தயாரித்து ஆன்லைனில் விற்றதாக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த அவர் பிணையில் வெளியே வந்தார்.சிறையிலிருந்து வெளியே வந்தாலும் ஷில்பாவுக்கும், குந்த்ராவுக்கு முன்னர் இருந்ததுபோல் திருமண வாழ்க்கை சுமூகமாக செல்லவில்லை என கூறப்படுகிறது. ஏனெனில் ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டது ஷில்பாவை ரொம்பவே பாதித்துவிட்டதாகவும்; அந்த சமயத்திலேயே விவாகரத்து கேட்டதாகவும் பாலிவுட் வட்டாரம் தெரிவித்தது.

சிறைக்கு சென்ற சமயத்தில் இருவரும் பிரிந்து விடுவார்கள் என வெளியான தகவலை ஷில்பா ஷெட்டி மறுத்தார். ஆனால் இப்போது மீண்டும் அதே விவாகரத்து தகவல் பரவும் நிலையில் அவர் கண்டிக்கவில்லை.

இந்நிலையில் ராஜ் குந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் இருவரும் பிரிகிறோம். இந்த கடினமான காலத்தை கடப்பதற்கு எங்களுக்கு அவகாசம் தாருங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார். ராஜ் குந்த்ராவின் இந்த பதிவில் ஷில்பா ஷெட்டியின் பெயர் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் இருவரும் பிரிவதை இந்தப் பதிவு உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like