1. Home
  2. தமிழ்நாடு

ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறாரா புதின்..?

1

ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். புதினின் பதவிக்காலம் அடுத்தஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் 2024 மார்ச் 17 ஆம் தேதிநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபராக தொடர்ந்து 4 முறை பதவி வகித்துள்ள புதின், 5-வதுமுறையாகவும் போட்டியிட முடிவு செய்துள்ளார். ரஷ்யாவை பொறுத்தவரை அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்தான்.

ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவியில் இருக்க முடியாது. ஆனால், புதினோ தனது பதவியைநீட்டிக்கும் வகையில் சட்ட திருத்ததை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 2036 ஆம் ஆண்டு வரை அவரால் அதிபர்பதவியில் நீடிக்க முடியும். 

ரஷ்யாவின் சர்வ வல்லமை படைத்த தலைவராகவும் உலக அரங்கில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும்புதின் நீடித்து வருகிறார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் புதினுக்கு கடுமையான எதிர்ப்புகள்ஒருபக்கம் இருந்தாலும் தொடர்ந்து ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க தலைவராகவே இருந்து வருகிறார் புதின்

Trending News

Latest News

You May Like