1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி ராஜினாமா செய்கிறாரா ? பாஜக தரப்பு விளக்கம்!

1

பாஜகவில் 75 வயதுக்கு மேல் அரசுப் பதவிகளில் இருக்க கூடாது என்ற விதி உள்ளது. பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் வயது நிறைவு பெறுகிறது. இதனால் அவர் பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இந்த சூழலில் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.

இதுதொடர்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “எனக்கு தெரிந்து கடந்த 10 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி சென்றது இல்லை. தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பிரதமரை மாற்ற வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. மோடிக்கு பிறகு யார் பிரதமர் என்ற ஆலோசனையும் நடந்துள்ளது” என்று கொளுத்திப் போட்டார்.

இதற்கு மகாராஷ்டிரா முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் அளித்த விளக்கத்தில், “நம்முடைய கலாச்சாரத்தில் தந்தை உயிருடன் இருக்கும்போது, வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. அது முகலாயர் கலாச்சாரம். அதைப் பற்றி விவாதிக்க இப்போது நேரம் வரவில்லை” என்று தெரிவித்தார்.


மேலும், “அவரது வாரிசைத் தேட வேண்டிய அவசியமில்லை. மோடி எங்கள் தலைவர், அவர் தொடர்ந்து பதவியில் இருப்பார். மேலும், இன்னும் பல ஆண்டுகக்கு பிரதமர் மோடி நாட்டை வழிநடத்துவார். 2029 ஆம் ஆண்டில், மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடியை நாம் பார்ப்போம்”என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.

பிரதமர் ஓய்வு தொடர்பான விவாதம் நாடு முழுக்க எதிரொலித்துள்ள நிலையில், இவ்வாறான பதிலை பாஜக தரப்பில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளது முக்கியமாக மாறியுள்ளது.

Trending News

Latest News

You May Like