மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா பவன் கல்யாண்?
பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியான அன்னா லெஷ்னேவாவை விவாகரத்து செய்கிறார் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது .
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் பவன் கல்யாண். அவர் தனியாக அரசியல் கட்சியும் நடத்தி வருகிறார். பவன் கல்யாண் ஏற்கனவே இரண்டு முறை விவகாரத்தாகி தற்போது மூன்றாவது மனைவி உடன் வாழ்ந்து வருகிறார்.Anna Lezhneva என்ற ரஷ்ய நடிகையை தான் பவன் கல்யாண் 3ம் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வருவாதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அவர்கள் விவாகரத்து செய்ய இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் பவன் கல்யாண் தரப்பு வைரலாகும் இந்த செய்தி பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
நந்தினியை மணந்த பவன் கல்யாண், பத்ரி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ரேணு தேசாய் மீது காதல் ஏற்பட்டு நந்தினியை விவாகரத்து செய்துவிட்டு ரேணு தேசாய் உடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் . சில வருட உறவுக்குப் பிறகு அவரை மணந்து ரேணு தேசாய் விவாகரத்து செய்தார். இப்போது, அவர் டீன் மார் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சந்தித்த ரஷ்ய மாணவி அன்னா லெஷ்னேவாவுடன் இருக்கிறார்.
பவன் கல்யாணுக்கு ரேணு தேசாய்க்கு அகிரா நந்தன் என்ற மகனும், ஆத்யா என்ற மகளும் உள்ளனர். மூன்றாவது மனைவிக்கு பொலேனா அஞ்சனா பவோனோன்வா என்ற மகளும், மார்க் ஷங்கர் பவானோவிச் என்ற மகனும் உள்ளனர்.