1. Home
  2. தமிழ்நாடு

நிலம் வாங்குபவர்களுக்கு பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா?

1

ஒரு நிலத்திற்கு தேவையான அடிப்படையாக சில விஷயங்கள் உள்ளது. மேலும் ஒரு நிலத்தை வாங்கும் போது பட்டா முக்கியமா. பத்திரம் முக்கியமா என்பதும் பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.

ஒருவரிடன் நிலம் அவரது உரிமையின் கீழ் தான் இருக்கிறது என்பதை பட்டா மற்றும் பத்திரத்தின் கீழ் உறுதி செய்யலாம். அதுமட்டுமல்லாமல் சிட்டா, அடங்கல், வரைபடம் எனவும் பல விவகாரங்கள் இருப்பது தனிக்கதை. முதலில் பட்டாவுக்கும் பத்திரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது பத்திரப்பதிவு துறையில் வழங்கப்படும் ஆவணங்களில் மோசடி செய்து முறைகேடாக நிலங்கள் மற்றும் நபர்களுக்கு விற்கப்படுகிறது. இதனை தடுக்க ஆவணங்கள் மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன

பட்டா என்றால் என்ன? பத்திரம் என்றால் என்ன என்று பார்த்து விடலாம்..

பட்டா என்பது வருவாய் துறை சார்ந்த ஆவணம். ஒரு நிலம் ஒருவரின் பெயரில் பட்டா போடப்பட்டு இருக்கிறது என்றால் வேறு ஒரு நபரின் பெயர்களும் இருக்கலாம். அதாவது வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றை முறைகேடாக பெற்று பட்டா மாறுதல் செய்வதாக புகார் எழுந்து வருவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். பட்டா என்பது நில உரிமை ஆவணம் என்பது தான் அடிப்படை. பட்டாவில் யார் பெயர் இருக்கிறதோ அவர்தான் அந்த நிலத்தில் தற்போதைய உரிமையாளராக கருதப்படுவார். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், நிலத்தின் சர்வே நம்பர், அது என்ன வகையான நிலம், நிலத்தின் அளவு, உரிமையாளர் பெயர், அவர் தந்தையின் பெயர் ஆகியவை இருக்கும்.

அதே நேரத்தில் பத்திரம் என்பது ஒரு சட்டபூர்வமான ஆவணம் ஆகும். இது நிலத்தை வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அந்த சொத்துகளுக்கான உரிமைகளை அவர்களுக்கு வழங்குகிறது. நிலம் உள்ளிட்ட சொத்து உரிமையை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கு பத்திரங்கள் பயன்படுகிறது. பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? என்ற கேள்வி மக்களிடம் இருக்கும் நிலையில் பத்திரமே அடிப்படையில் முக்கியம் என உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு என்னிடம் பட்டா இருக்கிறது, ஆனால் பத்திரம் இல்லை என சிலர் கூறுவதை பார்த்திருக்கலாம். பத்திரம் தான் வருவாய் ஆவணங்களுக்கான ஆவண ஆதாரமாக உள்ளது. ஒரு பத்திரத்தின் அடிப்படையிலேயே பட்டா வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பத்திரம் மட்டும் இருக்கும் நிலம் புறம்போக்கு நிலம் என்றும் சொல்லலாம். அந்த நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தினால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் பட்டா இருக்கிற நிலம் சட்டப்பூர்வ நிலம் அதை அரசாங்கம் கையகப்படுத்தினாலும், அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஒரு நிலத்திற்கு பட்டாவும் முக்கியம் பத்திரப்பதிவும் முக்கியம் என்பதையும் கவனிக்க வேண்டும். அரசாங்கத்திடம் நீங்கள் இலவச வீட்டு மனை பட்டா பெற்று இருந்தாலும், பிற்காலத்தில் அதனை மாற்றும்போது அதற்கு பத்திரம் தேவைப்படும். எனவே பட்டா பத்திரம் ஆகிய இரண்டையுமே உரிய ஆவணப்படுத்தி வைத்துக்கொள்வது அவசியம்.

Trending News

Latest News

You May Like