1. Home
  2. தமிழ்நாடு

பதவியை ராஜினாமா செய்கிறாரா ஓபிஎஸ்? அதிமுகவில் வீசும் சூறாவளி!!

பதவியை ராஜினாமா செய்கிறாரா ஓபிஎஸ்? அதிமுகவில் வீசும் சூறாவளி!!


அதிமுக கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்று வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டதத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்பட்டது. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இருவருக்கும் போட்டி நிலவுவதாகவும், அதனால் காரசார விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

கூட்டத்தின் முடிவில் வரும் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என மூத்த நிர்வாகிகள் கூறினர். இந்நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் ஓபிஎஸை சந்தித்து பேசியுள்ளனர். அதே போல், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஈபிஎஸ்-ஐ சந்தித்து பேசினர்.

இதனிடையே, கொரோனா பரவல் குறித்து மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்து வல்லுநர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. அந்த கூட்டத்தை அவர் புறக்கணித்துவிட்டார். மேலும், செயற்குழு கூட்டத்தில் பெரும்பாலோர் ஈபிஎஸ்ஸூக்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது.

அதனால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் உள்ளார் என்றும், அதனால் தனது காரில் உள்ள தேசியக் கொடியை அகற்றிவிட்டு அவர் சொந்த காரை பயன்படுத்தும் முடிவில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிலை இப்படியே நீடித்தால் ஓபிஎஸ் பதவி விலக கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like