1. Home
  2. தமிழ்நாடு

ஒரே படத்தால் நெட்பிளிக்ஸுக்கு இத்தனை கோடி நஷ்டமா?

1

நயன்தாரா நடிப்பில் இதுவரை ஓடிடியில் நெற்றிக்கண், ஓ2, மூக்குத்தி அம்மன், டெஸ்ட் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ரிலீஸ் ஆகின. இதில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் மட்டுமே வெற்றியடைந்தது. மற்ற படங்கள் தோல்வியை தழுவின.

இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டெஸ்ட் திரைப்படத்தால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார். டெஸ்ட் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடி கொடுத்து வாங்கியதாம். ஆனால் அப்படத்தின் மூலம் நெட்பிளிக்ஸுக்கு 5 கோடி கூட லாபம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 50 கோடி வரை நஷ்டமடைந்துள்ளதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.

நயன்தாரா தமிழில் நடித்து கடைசியாக வெளிவந்த 10க்கும் மேற்பட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தான் சந்தித்துள்ளன. இதனால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நயன். அவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டாக உருவாக்கி வருகிறார் சுந்தர் சி. இப்படத்தின் மூலம் நயன்தாரா கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Trending News

Latest News

You May Like