1. Home
  2. தமிழ்நாடு

நயன்தாராவின் நெற்றிக்கண் படம் காப்பியா ..?

நயன்தாராவின் நெற்றிக்கண் படம் காப்பியா ..?



நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஸ்பானிஷ் திரைப்படத்தின் காப்பி என்று சொல்லப்படுகின்றது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று நெற்றிக்கண். இந்த படத்தை அவரது வருங்கால கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் உடைய ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. புதுமுக இயக்குனர் கதை வசனம் எழுதி இயக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது முடிந்துவிட்டது. இந்த படத்திற்காக நெற்றிக்கண் என்ற தலைப்பை கொடுத்ததற்காக நடிகை நயன்தாரா கவிதாலயா நிறுவனத்திற்கு நன்றி கூறியுள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டரை வைத்து இந்த படம் ஜூலியாஸ் அய்ஸ் என்கிற படத்தின் காப்பி என்று கண்டுபிடித்துள்ளனர் .

அந்தப்படத்தின் கண் பார்வை குறைபாடு உடைய ஒரு பெண்ணை துரத்தும் கொலைகாரர்கள் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதை. அந்தப் படத்தினுடைய காப்பியை தான் நயன்தாரா நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படம் காப்பியா இல்லை வேற எதுவும் கதையா என்பதை படம் வெளியான பின்னர் தான் நாம் பார்க்க முடியும் அதனால் சற்று பொறுமையாக இருப்போம்.

Trending News

Latest News

You May Like