டிக்டாக் செயலியை வாங்கும் MICROSOFT?

அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ ஷேரிங் தளங்களில் டிக்டாக் செயலி முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் சீனர்கள் உரிமை கொண்டுள்ள டிக்டாக்கின் தாய் நிறுவனமான ‘பைட் டேன்ஸ்’ நிறுவனத்தின் அமெரிக்க துணை நிறுவன உரிமை சீனர்கள் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற உத்தரவுக்கான காலக்கெடு முந்தைய பைடன் தலைமையிலான ஆட்சியில் ஜனவரி 19-ம் தேதி அன்று நிறைவடைந்தது. தேசத்தின் பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யும் நடவடிக்கையும் அம்லானது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் டிக்டாக் உரிமை மாற்றம் தொடர்பான காலக்கெடுவை 75 நாட்கள் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை அவர் செய்தியாளர்கள் மத்தியில் சொல்லி இருந்தார். இருப்பினும் இது குறித்து டிக்டாக் மற்றும் மைக்ரோசாப்ட் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.