1. Home
  2. தமிழ்நாடு

கர்ப்பிணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமா..? தமிழக அரசு சொல்வதென்ன..!

1

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் சில மாதிரிகள் ஒமிக்ரான் வகையை சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொது சுகாதாரத்துறை வெளியிட்ட உத்தரவில், வயதான நபர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சற்றுமுன் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, அதிகப்படியான காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகப்பேறு காலத்திற்கு முன்பே மருத்துவமனைக்கு செல்வது நல்லது. கூட்டம் நிறைந்த இடங்கள், நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சில நாட்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போதைய சூழலில் முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றாலும், தங்களின் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் என்பது சர்வதேச அளவிலும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உலக சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like