வட கொரியாவின் தலைவர் பதவியேற்கிறாரா கிம் சகோதரி கிம் யோ ஜாங் ?

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அவர்களின் உயிர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உடல் முன்னேற்றம் இல்லாத காரணத்தால், அவரது சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வர இருப்பதாகவும் தகவல் அதிரடியாக வெளியாகியுள்ளது. கிம் ஜான் உன்னின் எட்டு ஆண்டுகால ஆட்சியை விட இது மிகவும் கொடூரமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் தன்னை எதிர்ப்பவர்கள் மீது இரக்கம் இல்லாமல் கடுமையாக நடந்து கொள்வார் என்றும், அது தனது உறவினர் ஆக இருக்கும் பட்சத்திலும் அவரிடமும் கடுமையாக நடப்பார் என்றும் தெரியவந்துள்ளது.
இதனை விட இவரது சகோதரியின் ஆட்சியானது மிகவும் கொடூரமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நவீன புதிய ஆயுதங்கள் மீது அதிக மோகம் கொண்ட கிம் யோ ஜாங் வடகொரியாவின் தலைவராகும் பட்சத்தில் , தான் பெண் என்பதாலும் வடகொரிய மக்கள் தன்னை அதிகளவு மதிப்பார்கள் என்று எண்ணி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கிம்மின் குடும்பத்தார் அங்குள்ள மக்களால் கடவுளுக்கு நிகராக பாதிக்கப்படுகின்றனர். இதனால் கிம் ஜான் உன் ஆட்சியில் எப்படி பார்க்கப்பட்டு வந்தாரோ, அதே போல் கிம் யோ ஜாங் மதிக்கப்படுவார் என்றும் , உலக நாடுகளை இவர் கடுமையாக எதிர்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in