பாஜகவில் இணைகிறாரா குஷ்பூ!?

காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. பெரம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஃபேல் குறித்தும், கோவிட் குறித்தும், ஜிஎஸ்டி குறித்தும், பணமதிப்பிழப்பு குறித்தும் கேள்வியே கேட்கக் கூடாது என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்று குற்றம் சாட்டினார்.
கொரோனா பேரிடர் காலத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கேட்டால் தங்களிடம் டேட்டா இல்லை என்று கூறும் மத்திய அரசு இந்தியாவில் உள்ளது என்று அவர் விமர்சித்தார்.
அமித்ஷா நலம்பெற ட்வீட் போட்டால் நான் பாஜகவில் இணையவுள்ளதாக வதந்தியை பரப்புகிறார்கள். அதில் உண்மை எதுவும் இல்லை என கூறினார். பிரதமர் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்றும் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
newstm.in