1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைனில் வெளியாகிறதா கே.ஜி.எஃப் - 2?

ஆன்லைனில் வெளியாகிறதா கே.ஜி.எஃப் - 2?


யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎஃப் - 2 ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம். முதல் பாகம் மாஸாக இருந்ததால் 2ஆம் பாகத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் என்று வதந்திகள் பரவியது. இந்நிலையில் படம் நிச்சயமாக திரையரங்கில் தான் வெளியாகும் என்றும் படத்தின் நாயகன் யாஷ் கூறியுள்ளார். கே.ஜி.எஃப் - 2 படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். திரையரங்கில் மக்கள் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே படத்தை உருவாக்கி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார். இப்போதைக்கு படத்தை அக்டோபர் 23 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் கொரோனா பொதுமுடக்க நடவடிக்கைகளை பொறுத்து திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like