1. Home
  2. தமிழ்நாடு

இது உண்மையா ? இந்த ரூ.20 நோட்டு இருந்தால் லட்சாதிபதியாக மாறலாம்..!

1

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதேனும் ஆச்சர்யமான விஷயங்கள் குறித்தான தகவல்கள் பரவி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ரூபாய் 20 நோட்டுக்கு லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்தான பதிவில் இருபது ரூபாய் பழைய நோட்டில் ஒரு பக்கம் காந்தியின் புகைப்படமும் மறுபுறம் 786 என்று நோட்டின் எண் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இந்த ரூபாய் நோட்டு ஆன்லைன் விற்பனை தளங்களில் அதிகம் மவுஸ் உடன் விற்பனையாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை 20 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அதை நீங்கள் 6 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இந்த நோட்டுக்கு ஆன்லைனில் அதிக டிமாண்ட் இருக்கிறது. அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். அதுவும் வெறும் 20 ரூபாய் நோட்டை வைத்து நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

உங்களிடம் இந்த அரிய வகை 20 ரூபாய் நோட்டு இருந்தால் அதை விற்க எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் அமர்ந்துகொண்டே ஆன்லைன் மூலமாக விற்கலாம்.இதற்கு நீங்கள் www.ebay.com என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் இப்போது முகப்பு பக்கத்தில் சென்று உங்களை 'விற்பனையாளராக' பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படம் எடுத்து தளத்தில் பதிவேற்றவும். 

Trending News

Latest News

You May Like