1. Home
  2. தமிழ்நாடு

இது உண்மையா ? அண்ணாமலையார் கோயில் வளாகத்துக்குள் அசைவம் உண்ட 2 பேர்..!

1

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருகோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நீண்ட தூரம் பயணித்து வந்தவர்கள் கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு, கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை உண்பது வழக்கம். இல்லையெனில் தாங்கள் கட்டிக் கொண்டு வந்த உணவை கோவில் வளாகத்துக்குள் உட்கார்ந்து சாப்பிடுவதும் வழக்கம். தமிழ்நாட்டில் பொதுவாக குலதெய்வம் கோயில்கள் தவிர பிற அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் அசைவ உணவுகள் அனுமதிப்பது இல்லை. குலதெய்வம் கோயில்களில் மட்டும் ஆடு, கோழி ஆகியவை பலி கொடுக்கப்பட்டு, அந்த இறைச்சியை சமைத்து சாமிக்கு படைத்து அதனை உண்ணும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் புகழ்பெற்ற கோயில்களான மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், அண்ணாமலையார் திருக்கோயில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், பழநி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் முற்றிலும் அசைவ உணவு என்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கோயில்களில் சைவ உணவுகளே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னதானமாக சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு இன்று வந்த ஒரு ஆணும், பெண்ணும் கோயிலின் உட்புறம் ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து ஒரு பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்த பார்சல் உணவை எடுத்து உண்டனர். அந்த வழியாகச் சென்ற சிலர் அவர்களை பார்த்தபோது அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது போல தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிலர் கோயில் வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து அங்கே வந்த அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவர், சைவ உணவு உண்டதாக கூறப்படும் அந்த ஆண் பக்தரிடம் விசாரணை செய்தார். அப்போது அவர் தாம் கொண்டு வந்த சாப்பாட்டை எடுத்துக் காட்டி, இது சைவம்தான் என்று கூறியுள்ளார். மேலும் சாப்பிட்டு முடித்த வெறும் இலை ஒன்றை காண்பித்தார். அதில் வைத்து அசைவ உணவு சாப்பிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அறநிலையத்துறை அதிகாரிக்கு எழுந்தது. இதனையடுத்து அறநிலையத்துறையின் சார்பில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் அசைவ உண்டதாக கூறப்படும் இருவரையும் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அண்ணாமலையார் திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, எப்படி அவர்கள் அசைவ உணவை கோயில் வளாகத்துக்குள் கொண்டு வந்த உண்டனர் என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Trending News

Latest News

You May Like