இது உண்மையா ? அண்டார்டிகா எரிமலை தங்க துகள்கள் வெளியேற்றுகிறதா?
இந்த எரிமலையின் செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகளை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றுள்ளது அவர்கள் கண்டறிந்த ஒரு அறிய தகவல்.
வாயு மற்றும் தூசி துகள்களுடன் தங்கத் துகள்களையும் எரிமலை வெளியேற்றி வருவதே இதற்கு காரணம்.
ஒன்றல்ல இரண்டல்ல ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சம் மதிப்பிலான தங்க துகள்களை இந்த எரிமலை வெளியேற்றி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? எரிமலை கக்கும் போதெல்லாம் 20 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவிலான தங்க துகள்களும் வெளியேறி வருகின்றன.
இதனால் எரிமலையைச் சுற்றி ஆயிரம் கிலோ மீட்டர் வரை தங்க மழை போல தங்கத் துகள்கள் கொட்டி கிடக்கின்றன. எரிமலை பாறைகளில் தங்க படிமங்கள் இருக்கலாம் என்றும் எரிமலை சீற்றத்தின் போது லாவா குழம்புடன் துகள்களாக தங்கம் வெளியேறி வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் செயற்கைக்கோள்களை ஆய்வு செய்தபோது எரிமலையின் உச்சியில் லாவா குழம்பால் மிகப்பெரிய ஏரி உருவாகி இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.