1. Home
  2. தமிழ்நாடு

பிரதமரின் தாயாரை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் அளவுக்கு பேசுவதா ? அனிதா ராதாகிருஷ்ணனை விளாசிய வானதி சீனிவாசன்..1

1

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மோடி, முன்னாள் தமிழக முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான காமராஜரை புகழந்து பேசினார். பாஜகவுக்கு நேர்மாறான கொள்கைகளை கொண்டிருந்த காமராஜரை புகழ்ந்து அரசியல் ஆதாயம் தேடியதாக கூறி மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், " "ஏதோ காமராஜரை கட்டிப்பிடித்து விளையாடியதை போல மோடி பேசி இருக்கிறார். டெல்லியில் காமராஜரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாவிங்கடா நீங்க" என அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். அவரது பேச்சுக்கு நடுநடுவே, பிரதமர் மோடியை இழிவான வார்த்தைகளில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாக தெரிகிறது. அதாவது, மோடியின் தாயாரை சுட்டும் வார்த்தைகளை அனிதா ராதாகிருஷ்ணன் பயன்படுத்தியாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பிரதமரின் தாயாரை இழிவாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like