தினமும் பீர் குடித்தால் ஆண்களுக்கு இவ்வளவு நன்மையா !!
தினமும் ஒரு பீர் குடிப்பது ஆண்கள் உடல்நலத்துக்கு நன்மை செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பார்டி, கொண்டாட்டம் என்றால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் முதல் தேர்வு பீராக இருக்கிறது. 5 முதல் 12 விழுக்காடு ஆல்கஹால் மட்டுமே இருப்பதால் மற்ற ஆல்கஹால்களை ஒப்பிடும்போது இதனால் ஏற்படும் விளைவுகள் குறைவு. மேலும், பீர் (Beer) குடிப்பதால் உடல் வலி மற்றும் இதய நோய்கள் குறைவதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது வேறுகதை.
இந்த நிலையில் தற்போது நடத்தப்பட்ட புதிய ஆய்வில் பீர் குடிக்கும் ஆண்களுக்கு முக்கியமான நன்மை கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்படி, ஒரு நாளைக்கு ஒரு பீர் குடிப்பது ஆண்களின் குடல் பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்தும், இதன்மூலம் உடல்நலம் ஆரோக்கியமாகும் என கூறப்பட்டுள்ளது.

குடல் பாக்டீரியாவின் பன்முகத்தன்மையில் ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத பீர் ஏற்படுத்தும் விளைவை கண்டறியும் வகையில் போர்ச்சுக்கல் நாட்டின் நோவா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 19 வயது வந்த ஆண்களிடம் 11 அவுன்ஸ் (325 மில்லி) ஆல்கஹால் அல்லது ஆல்கஹால் அல்லாத லாகரை தினமும் இரவு உணவிற்குக் குடிக்கச் சொன்னார்கள். ஆல்கஹாலிக் பியர்களில் 5.2% ஆல்கஹால் உள்ளது, இது வலுவானதாகக் கருதப்படுகிறது.
ஆய்வின்போது அவர்களின் உணவு அல்லது உடற்பயிற்சி பழக்கத்தை மாற்ற வேண்டாம் என்று கூறப்பட்டது. இரத்தம் மற்றும் மலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு முன்னும் பின்னும் அவற்றின் குடல் நுண்ணுயிர் பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் ஆண்களின் குடலில் பலவகையான நுண்ணுயிரிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், ஆனால் எடையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இதயம் அல்லது வளர்சிதை மாற்ற பிரச்சனைகளின் இரத்தத்தில் புதிய அறிகுறிகள் எதுவும் இல்லை.

அதாவது, நம் வயிற்றில் இயற்கையாகவே நன்மை செய்யும் (கட்) பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அவற்றின் வளர்ச்சி பல்வகைமையுடன் இருந்தால் நோய், நீரிழிவு பாதிப்பு ஆபத்து குறையும். அவற்றின் அளவு குறைந்தால் நோய் ஆபத்து அதிகரிக்கும். இந்த நிலையில் தினம் ஒரு பீர் என்ற அளவோடு குடித்தால் கட் பாக்டீரியாக்களை அதிகரித்து உடல்நலம் காக்க முடியும் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர்.
newstm.in