1. Home
  2. தமிழ்நாடு

தங்கத்தில் முதலீடு செய்வது சரியானதா?

தங்கத்தில் முதலீடு செய்வது சரியானதா?

உலகம் முழுவதுமே தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சொந்தங்கள் சூழ உற்சாகமாக வருடத்தின் இந்த பொங்கல் பண்டிகையைத் தான் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். எந்த ஊரில் வேலைப் பார்த்தாலும், பொங்கலுக்காவது ஊரோட சேர்ந்து கொண்டாடணும் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற கொள்கையின் படி, போகியுடன் தொடங்கிய இந்த இந்த பொங்கல் திருநாளை, வரலாற்று ரீதியாக தமிழர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. தை மகள் வந்தால் போதும் வாழ்வு செழிக்கும், வளம் கொழிக்கும் என்பார்கள். அப்படிப்பட்ட தை மகளை தங்கத்தோடு வரவேற்பது தானே அழகாக இருக்கும்.


இந்த பொங்கலுக்காக கல்யாண் ஜுவல்லர்ஸ் கவர்ச்சிகரமா ஆஃபர்களை அளிக்கிறது. மிக குறைந்த சேதாரம் மற்றும் செய்கூலியுடன் உங்களுக்கு கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைகளை வழங்குகிறது. உங்கள் பழைய நகைகளை கொடுத்து, நல்ல ஆஃபர்களுடன் நகைகளை வாங்கிடுங்கள். பொங்கலை முன்னிட்டு விதவிதமாக நிறைய கலெக்சன்களும், விதமான மாடல்களும் தமிழகத்தின் பிரபல நகைக் கடைகளில் அணிவகுக்கின்றன. தங்கத்தின் விலை இந்த வருட இறுதிக்குள் ரூ.4000ஐ எட்டி விடும் என்கிறார்கள் நிபுணர்கள். எந்த நகைக் கடைகளில் தங்கம் வாங்கினாலும், சிறுக சிறுக தங்க நகைகளில் முதலீடு சேர்த்து, சேமித்து பயனடையுங்கள்.

தங்கத்தில் முதலீடு செய்வது சரியானதா என்கிற கேள்வி காலம் காலமாகவே இருந்து வருகிறது. உங்களது பிற சேமிப்பு வழிமுறைகளுக்குப் பிறகு, நிச்சயமாக தங்கத்தில் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. நிச்சயம் நீங்கள் வாங்கும் தங்க நகைகள் விலை ஏற்றத்தில் தான் இருக்கும். குறைந்தாலும், கணிசமாக குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால், நீங்கள் தங்க நகைகளாக முதலீடு செய்ய நினைத்தால், சேதாரமும், செய்கூலியும் குறைவாக இருக்கும் கடையைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், கிராம் தங்க விலையை விட, இவை அதிகம் வசூலிக்கிற பிரபல நகைக் கடைகள் தமிழகம் முழுவதுமே கிளைகளைப் பரப்பி வைத்துள்ளன. பெண்களும், டிசைனில் மனதைப் பறிகொடுத்து, அதிகளவில் பணத்தை இழக்கிறார்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like