1. Home
  2. தமிழ்நாடு

தங்கத்தை கிரெடிட் கார்டு மூலம் வாங்குவது லாபமா? நஷ்டமா?

1

கிரெடிட் கார்டு மூலம் நகை வாங்குவதால் ஏற்படும் தீமைகள்?:

அதிக வட்டி விகிதங்கள்: நீங்கள் முழு நிலுவைத் தொகையும் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் வட்டி கட்டணங்கள் அதிகரிக்கலாம்.

கூடுதல் கட்டணம்: சில நகைக்கடைக்காரர்கள் செயலாக்கக் கட்டணங்களை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

கடன் பயன்பாட்டு விகிதம்: பெரும் பரிவர்த்தனையை செய்யும் போது உங்களுடைய கடன் பயன்பாட்டு விகிதம் அதிகரிக்கும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கலாம். மேலும் எதிர்காலத்தில் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
 

எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்தி நகை வாங்கும் போது கீழ்காணும் சூழ்நிலை ஏற்பட்டால் நகை வாங்குவதை தவிர்க்கலாம். அவை கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கடைக்காரர் கூடுதல் கட்டணம் வசூலித்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். நிலுவை தொகையை முழுமையாக செலுத்த முடியவில்லை என்றால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

நன்மைகள் என்ன?

கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகள்: நீங்கள் தங்கம் வாங்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு ரிவார்டுகள் அல்லது கேஷ்பேக் கிடைக்கும். இதை வைத்து வேறு ஏதேனும் விஷயத்தை வாங்கலாம் அல்லது மீண்டும் தங்கமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

போனஸ்: புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும் போது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவு செய்தால் வெல்கம் போனஸ் கிடைக்கும். தங்கம் வாங்குவதன் மூலம் அந்த இலக்கை எளிதாக அடையலாம்.

பூஜ்ஜிய வட்டி விகிதங்கள்: சில கிரெடிட் கார்டுகள் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி இல்லாமல் பணம் செலுத்த அனுமதிக்கும். இந்த சலுகையை பயன்படுத்தி, தங்கத்தை வாங்கி, தவணை முறையில் பணம் செலுத்தலாம்.

Trending News

Latest News

You May Like