ரிப்போர்ட் கூட பார்க்காமல் எனக்கு 4 கீமோ போட்டது சரியா? என் நுரையீரலை கெடுத்துட்டார்! விக்னேஷின் தாய் பேட்டி..!
சென்னை கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை துறை மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து விக்னேஷின் தாய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது பெயர் பிரேமா. எனது கணவர் பெயர் மனோகர். எனக்கு விக்னேஷ், லோகேஷ், கமலேஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 102 நாட்களாக எனக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 18 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
அதன்பிறகு புற்றுநோய் அறிகுறி இருப்பதாக கூறிய அவர்கள் சரி செய்ய 3 லட்சம் செலவாகும் என்றார்கள். ஆனால் எங்களால் செலவு செய்ய முடியாது என்பதால் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டோம். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிறிது நாட்கள் சிகிச்சை பெற்றேன். அதற்கு ரூ 95 ஆயிரம் செலவானது.
டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி எனக்கு கீமோ தெரபி ஊசி போட்டாங்க. பிறகு அடுத்த ஊசியை நான் போட்டுக் கொள்ளவில்லை. எனக்கு தெரிந்தவர்கள் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நன்றாக பார்ப்பதாக தெரிவித்தார்கள. அதனால் ஜனவரி 10ஆம் தேதி அங்கு போய் டாக்டர் பாலாஜியை பார்த்தேன். அப்போது அந்த டாக்டர், என்னிடம், "உனக்கு இரண்டாவது ஸ்டேஜ் கேன்சர்தான். இங்கேயே கீமோ தெரபி போட்டுக் கொள்கிறீர்களா" என கேட்டார். நானும் போட்டுக் கொள்கிறேன் என்றேன். ஆனால் இன்னிக்கு எனக்கு 5ஆவது ஸ்டேஜ் கேன்சர் என்கிறார்கள். ரிப்போர்ட்டை எல்லாம் அடையாறில் இருந்து வாங்கிக் கொண்டு ஜனவரி 14 ஆம் தேதி வருமாறு சொன்னார் .
நானும் ரிப்போர்ட்களை வாங்கிக் கொண்டு போனேன். 14, 15, 16 ஆகிய தேதிகளில் எனக்கு 17 ஊசி போட்டார். ஒவ்வொரு கீமோவுக்கு நான் ஏதாவது கேட்டால், "நான் டாக்டரா, நீ டாக்டரா" என கேவலமாக பேசுவார். என்னை ஆங்கிலத்தில் திட்டுவார். என்னை விட வயதானவர்களை எல்லாம் திட்டுவார். ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கும் எனக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை. எனது உறவினர் என்னை விருகம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 2 மாசம் சிகிச்சை எடுத்தேன். ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்து சிகிச்சை கொடுத்தார்கள். சவீதா மருத்துவமனைக்கு போகுமாறு அந்த மருத்துவர் சொன்னதால் அங்கு போய் 3 கீமோ போட்டேன். சவீதாவில் என்னை ஐசியூவில் வைத்திருந்தார்கள். செலவு நிறைய ஆனதால் நான் அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன்.
டாக்டர் பாலாஜி எனக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நான் கூற மாட்டேன். எனது ரிப்போர்ட்களை வைத்து எனது உடம்புக்கு என்ன என கண்டுபிடித்து அதற்கேற்ப சிகிச்சை அளித்திருக்க வேண்டாமா? 25 ஆண்டுகள் அனுபவம் உள்ள மருத்துவர் என் உடலில் என்ன பிரச்சினை என ஸ்கேன் ரிப்போர்ட்டை கூட பார்க்காமல் எனக்கு மேலும் 4 கீமோ போட்டது சரியா? அதனால்தான் எனது நுரையீரல் கெட்டு போச்சு
இன்று கூட நான் ஒரு ஸ்கேன் எடுக்க சென்றிருந்தேன். அப்போதுதான் செல்போனில் விக்னேஷ் குறித்து எனக்கு வீடியோவை காட்டினார்கள். சவீதாவில் நான் அட்மிட் ஆகியிருந்த போது பெண்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் என் மகன் விக்னேஷ்தான் செய்தான். என் உள்பாவாடை, நைட்டியை கூட அவன்தான் மாற்றிவிடுவான். எனக்கு கஷ்டமாக இருக்கும். எனது கழிவுகளை கூட பெட்பேன் வைத்து அவன்தான் பிடித்து கொண்டு போய் ஊற்றுவான். என் கஷ்டத்தை பார்த்து என் மகன் அப்படி செய்துவிட்டானா என தெரியவில்லை, அவன் எந்த வம்பு தும்புக்கும் செல்ல மாட்டான். என் மகன் நேரடியாக கத்தியால் குத்தினான். ஆனால் 25 வருட அனுபவம் கொண்ட மருத்துவர் என் நுரையீரலை எடுத்துவிட்டாரே. என் வீட்டுக்கு வந்த போலீஸார் எனது மருத்துவ அறிக்கைகளை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டனர். எனக்கு பாலாஜி டாக்டர் மீது இன்னும் கோபம் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.