1. Home
  2. தமிழ்நாடு

நீங்கள், சிரித்தால் சரி, நாங்கள் சிரித்தால் தவறா?

1

திருச்சியில் முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தைத் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும், ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி அவர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அதன தொடர்ச்சியாகத் தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மக்களிந் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அதிமுகவின் லட்சியம். ஒரு புயல்தான் வந்தது. அதற்கே திமுக ஆட்சி ஆடி போய் விட்டது. ஆனால் கடந்த கால அதிமுக ஆட்சியில் எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் வந்தது. அப்போது நாம் அதனை திறமையாக கையாண்டோம். டிசம்பர் மாதம் பெய்த மழையின்போது என்னால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்கினேன்.

தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்தபோது, தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறினேன். எங்கு பார்த்தாலும் தண்ணீர் மற்றும் வெள்ளத்தால், கடல்போல் தூத்துக்குடி நகரம் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. மக்களை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறினேன்.

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், திமுக அரசு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மாறாக மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யாமல், டெல்லிக்கு கூட்டணி பேச சென்றுவிட்டார். பின்னர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ், நான் சிரித்தால் பல் தெரியும் என்று அவர் கூறுகிறார்.

2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அப்போது நானும் அவருடன் அமர்ந்திருந்தேன்.அதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி, அதில் பல்லை காட்டிக்கொண்டிருக்கிறார் என்று பேசினார் என்று குறிப்பிட்டார். பின்னர் உதயநிதி ஸ்டாலினும், பிரமதர் மோடியும் இருக்கும் புகைப்படத்தை காட்டிய இபிஎஸ், உதயநிதி ஸ்டாலினும் பல்லைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். நீங்கள், சிரித்தால் சரி, நாங்கள் சிரித்தால் தவறா? என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு: 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் அடிக்கல் நாட்டினார் பிரதமர். அப்போது பிரதமருடன் அமர்ந்திருந்த நான் சிரித்துக் கொண்டிருந்தேன். இதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி. நான் பல்கலைக் காட்டிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். நீங்கள் காட்டினா சரி நான் காட்டினால் தவறா? என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like