1. Home
  2. தமிழ்நாடு

இனி அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம்...? தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு ..!

Q

ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 1000 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு இந்த வகை கொரோனா காரணமாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு வகை தொற்றுகளும் அதிக வீரியம் இல்லாதவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது ஆறுதலாக அமைந்துள்ளது.

அதேசமயம், சென்னை மறைமலைநகரைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சமீபத்தில் பலியானார். இதுவரை தமிழ்நாட்டில் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் கொரோனா குறித்தான அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள வேளையில், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தொற்று அதிகரித்துவருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கூட்டம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்று அறிகுறி தென்படுவோரிடம் இருந்து பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும் எனவும், பொது இடங்களில் விரும்பும்போது கைக்குட்டைகளை வைத்து மறைத்து கொண்டு இரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பருவகால காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like