1. Home
  2. தமிழ்நாடு

இது தங்கமா இல்ல தக்காளியா ? பொதுமக்கள் அதிர்ச்சி!

1

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.150 வரை சென்றது. வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரை விற்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக ஓரளவு விலை குறைந்து வந்தது. அதன்படி, கடந்த 24-ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

Tomato

அதன் பின்னர், மீண்டும் விலை உயரத் தொடங்கியது. கடந்த 25-ம் தேதி கிலோவுக்கு ரூ.10-ம், 26-ம் தேதி கிலோவுக்கு ரூ.20-ம் உயர்ந்து இருந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரகம் தக்காளி கிலோ ரூ. 150-க்கும், இரண்டாம் ரகம் ரூ.140-க்கும், 3ம் ரகம் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tomato

இன்று கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மதனபள்ளி, கர்நாடகா சிக்மங்ளூரூ, கோலார், ஒட்டப்பள்ளி, ஆகிய பகுதியில் இருந்து 400 டன் மட்டுமே வருகை தந்துள்ளது. மேலும் இதர காய்கறிகள் 5,500 டன் அளவு வந்துள்ளது. சென்னையில் பன்ணை பசுமை மற்றும் அமுதம் அங்காடியில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.

Trending News

Latest News

You May Like