1. Home
  2. தமிழ்நாடு

சட்டக் கல்லூரிகளைத் திறந்தால் போதுமா? பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா?

Q

அரசு சட்டக்கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (செப்.,20) விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள், பேராசிரியர்கள் விகிதம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்குறித்து நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை; பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே இல்லை.
* தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன. அதில் எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர்?
* புதிய சட்டக் கல்லூரிகளைத் திறந்தால் போதுமா? தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா?
* அரசு சட்டக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending News

Latest News

You May Like