வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலுநாச்சியார் யார் என்று சொல்லு தம்பி - சீமான் விமர்சனம்!
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை பல முறை வரவேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மாநாட்டுக்கு
rவாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், ‘திராவிடமும் தமிழ் தேசியமும் தான் எங்கள் கொள்கை’ என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்குச் சீமான், ‘இது எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிரானது’ என்று கூறி அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் :
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. சாம்பார் என்றால் சாம்பாரெனச் சொல்ல வேண்டும்; கருவாட்டு குழம்பு என்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும். இரண்டையும் சேர்த்து, கருவாட்டு சாம்பார் என்று சொல்லக் கூடாது.
காட்டுப்பூனையும், நாட்டு கோழியும் ஒன்றா? திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்பது கொள்கை அல்ல; அது, அழுகிய கூமுட்டை. சாலையில் ஏதாவது ஒரு பக்கம் நிற்க வேண்டும்; நடுவில் நின்றால் லாரி அடித்து இறந்துவிடுவாய்.
‘தம்பி’ நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களைப் படித்துப் பட்டம் பெற்று பிஎச்டி வாங்கி விட்டோம்.
வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலுநாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. ‘ ப்ரோ’ இது ட்ரைலர் தான். மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்தபிறகு தான் வரும். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்பேன் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. கருப்பட்டிக்கு எப்படி பால்வரும்?
என தவெக தலைவர் விஜய்-யை கடுமையாக விமர்சித்தார்