கருணாநிதியின் பெயரை வைத்தால் மட்டும் போதுமா? பாதுகாப்பு வழங்க வேண்டாமா? ஜெயக்குமார்!
ஆயுதத்துடன் ஒருவர் மருத்துவமனைக்குள் வருகிறார். அவரை ஏன் முறையாக சோதிக்கவில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அதில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விதித்துள்ள விதிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இந்த ஆட்சியில் மருத்துவர்கள் முதல் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்கள் நிம்மதியாக வெளியில் சென்று வர முடியவில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. கருணாநிதியின் பெயரை வைத்தால் மட்டும் போதுமா? விதிகள் படி, சட்டத்தின் படி பாதுகாப்பு வழங்க வேண்டாமா? ஸ்டாலின் அரசு அத்தகைய பாதுகாப்பு எதையும் வழங்கவில்லை.
எனவே, எதிர்காலத்தில் மருத்துவர்கள் மீது எந்தவொரு தாக்குதல்களும் நடக்காத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஸ்டாலினின் P.A வாக சென்றுவிட்டால் தமிழ்நாடு மருத்துவ துறை தப்பிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.