1. Home
  2. தமிழ்நாடு

இவனெல்லாம் ஒரு மனுஷனா ? நிறைமாத கர்ப்பிணி வயிற்றை வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை..!

1

உத்திர பிரதேச மாநிலத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சரிபார்க்க 8 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அறுத்து இருக்கிறார் கொடூர கணவன். இந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி சவுரப் சக்சேனாவின் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தக் கொடூர சம்பவம் கடந்த 2020-ம் செப்டம்பர் 19-ம் தேதி படவுன் பகுதியில் நடந்திருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் பெயர் அனிதா, தாக்கிய கணவரின் பெயர் பன்னா லால். இந்த சம்பவத்தின்போது, அனிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அதோடு, அப்போது இருவருக்கும் ஐந்து பெண் குழந்தைகளும் இருந்தன.

கடந்த செப்டம்பர் 19, 2020 அன்று புடானில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பன்னா லால் (46) தனது மனைவிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறக்கும் என ஒரு பூசாரி கூறியதை தொடர்ந்து இப்படியான செயலில் ஈடுபட்டு இருக்கிறார். மீண்டும் பெண் குழந்தை பிறக்கும் என பூசாரி கூறியதால் அதை உறுதி செய்யும் விதமாக அவரது மனைவி அனிதா தேவியின் வயிற்றை அரிவாளால் கிழித்து பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து அனிதாவை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் புடான் போலீசார் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றினர். ஆனால், கணவர் வயிற்றைக் கீழித்ததில் கருவில் இருந்த ஆண் சிசு உயிரிழந்து இருக்கிறது. அந்த வகையில், பன்னா லால் மீது IPC 307 (கொலை முயற்சி) மற்றும் 313 (பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2021ல் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து, பன்னா லால்மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 307 (கொலை முயற்சி) மற்றும் 313 (பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், தனக்கு நேர்ந்த கொடுமைகளை நீதிமன்றத்திலும் அனிதா தெரிவித்தார். அப்போது கூட, அனிதா தனது சகோதரர்களுடன் சொத்து தகராறில் இருந்ததால், பொய் வழக்குப் பதிவு செய்ய தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக பன்னா லால் நீதிமன்றத்தில் கூறினார். இந்த நிலையில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சவுரப் சக்சேனா தற்போது பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்.கூடவே குற்றம் சாட்டப்பட்ட பன்னாவிற்கு சட்டத்தின்மீது எந்த பயமும் இல்லை என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. அதன்படி, ரூ. 50,000 பண அபராதம் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

Trending News

Latest News

You May Like