1. Home
  2. தமிழ்நாடு

தவெக-வை காப்பி அடிக்கிறதா திமுக..? திமுகவிலும் மாற்றத்திறனாளிகள் மற்றும் கல்வியாளர் அணி..!

Q

75 ஆண்டுகள் பாரம்பரியமிக்க திமுக, இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வியாளர்களுக்கும் தனி அணியை உருவாக்கியது இல்லை.

 

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியைத் தொடங்கிய விஜய், தனது தவெக-வில் மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வியாளர்களுக்கும் தனி பிரிவை தொடங்கி செம்மையாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் மதுரையில் இன்று தொடங்கிய திமுக பொதுக்குழு கூட்டத்தில், தவெக பாணியில் திமுகவிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆசிரியர்கள் பேராசிரியர்களை உள்ளடக்கிய கல்வியாளர் அணி ஏற்படுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

 

மேலும், திமுகவில் துணை பொது செயலாளர் எண்ணிக்கையை 5-லிருந்து 6 ஆக உயர்த்துவதற்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை செம்மொழி நாளாக கொண்டாடவும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

திமுகவில் ஏற்கனவே மாணவர் அணி, மகளிர் அணி வழக்குரைஞர் அணி என 23 பிரிவுகள் இருக்கின்றன. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்வியாளர்கள் பிரிவு தொடங்கப்பட்டதன் மூலம் திமுகவிலுள்ள அணிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like