தங்க கடத்தலின் மையமாக மாறுகிறதா சென்னை !!

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இன்று சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு குவைத் மற்றும் துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் வந்தது. இந்த விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்திக் கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் வந்த ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஜிங்கா சுதாகர் (40) என்பவரை சந்தேகத்தின் பேரில் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் பிரபல நிறுவனத்தில் கிரீம் ஜெல் பாட்டிலில் 14 ஆயிரம் மதிப்புள்ள தங்க துண்டுகள் வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதேபோன்று, துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி (33) என்பவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தலைக்கு பயன்படுத்த கூடிய கிரீம் ஜெல் பாட்டிலில் தங்கத்தை மறைத்து வைத்து வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ. 14 லட்சத்தி 16 ஆயிரம் மதிப்புள்ள 270 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். ஆக மொத்தம் அவர்கள் இருவரிடம் இருந்து ரூ. 33.3 லட்சம் மதிப்புள்ள 635 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கம் விலை இந்தியாவில் அதிகரித்துள்ளதை அடுத்து வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது .
newstm.in