1. Home
  2. தமிழ்நாடு

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்தாகிறதா? மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி !!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்தாகிறதா? மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி !!


சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. விடையை மட்டும் குறிக்கும் வகையிலான முதல் கட்ட தேர்வு டிசம்பர் மாதத்திலும், விரிவான விடை அளிக்கும் வகையிலான 2 ஆம் கட்ட தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும் எனவும் புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அண்மையில் நடைபெற்ற முதல் கட்ட தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சில சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியிடப்படுவதாகவும், தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்தாகிறதா? மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி !!

இந்த நிலையில் தான், சிபிஎஸ்இ முதல்கட்ட பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ பள்ளிகளின் மேலாண் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண் கூட்டமைப்பினர், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் சிபிஎஸ்இ அமைப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், முதல் கட்ட பொதுத் தேர்வுக்கான கேள்வித் தாள்களையும், விடைகளையும் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே மாணவ, மாணவிகளுக்கு சில பள்ளியின் ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். மேலும், விடை தெரியாத கேள்விகளுக்கு விடை தேர்வை ஆங்கில எழுத்தான 'c ' என குறிப்பிட வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு 'c ' என குறிப்பிட்டுள்ள கேள்விக்கான பதில் a,b,d என எந்த தெரிவாக இருந்தாலும் அதனை ஆசிரியர்களே மாற்றியமைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். முதல்கட்ட தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண்கள், 2 ஆம் கட்ட தேர்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் இது போன்ற குளறுபடிகள் நடைபெறுகிறது, என்று கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்தாகிறதா? மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி !!

பள்ளியை சாராத ஒரே ஒரு நபர் மட்டுமே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவதால் எளிதில் குளறுபடிகள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளின் மேலாண் கூட்டமைப்பினர், இதுபோன்ற முறைகேடுகளின் காரணமாக பல சிபிஎஸ்இ பள்ளிகளில் சுமார் 20 மாணவர்கள் வரை முழு மதிப்பெண்களை பெறுவதோடு, பள்ளியிலும் 100 சதவீதம் தேர்ச்சி காட்டப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருவதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like