தமிழகத்தில் முன்னேறுகிறது பாஜக ? அண்ணாமலை மற்றும் தமிழிசை 2 ஆவது இடத்திற்கு முன்னேற்றம்..!
தமிழ்நாட்டில் மொத்தமாக 39 மக்களவை தொகுதிகளும் களம் கண்ட பாஜக கூட்டணியில், இதுவரை ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுவருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான பாமகவை சேர்ந்த தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி தற்போதுவரை முன்னிலை வகித்துவருகிறார்
இந்நிலையில் கோவை தொகுதியில் நின்ற தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வெற்றி கிட்டுமா என்ற எதிர்பார்ப்பில் பாஜக ஆதரவாளர்கள் இருந்துவருகின்றனர்.கோவை தொகுதியை பொறுத்தவரையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது வரை இரண்டாவது இடத்தில் மட்டுமே நீடித்து வருகிறார்.
இந்நிலையில் கோவையில் அண்ணாமலை தென் சென்னையில் தமிழிசை, நெல்லையில் நயினார், நீலகிரியில் எல்.முருகன் ஆகியோர் 2 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளனர்