1. Home
  2. தமிழ்நாடு

விவாதத்திற்கு அமித்ஷா தயாரா?சவால் விடுத்த ராசாவுக்கு லிஸ்ட் போட்ட தமிழிசை!

1

திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் நேற்றைய தினம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவருடைய தகுதியினை மறந்து அவர் பேசி உள்ள பேச்சின் மொத்த தொகுப்பையும் சுருக்கி கூறினால் அப்பட்டமான பொய்கள் , அருவருப்பான வஞ்சகம் மற்றும் பிளவு நோக்கம் கொண்ட சூதுரை. இவை மூன்றும் தவிர அவருடைய பேச்சில் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

இது கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லதல்ல மாநில ஒன்றிய அரசுக்கிடையேயான சுமுகமான போக்கிற்கு உந்தகம் விளைவிக்கும் போக்கில் அவர் பேசியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டை ஒரு அமைதி பூங்காவாக இருப்பதை விரும்பாமல் அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள அமித்ஷாவின் பேச்சையும் போக்கையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.

மேலும் அமித்ஷாவை பார்த்து திமுகவினருக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும் எங்களை பார்த்து ஷாக் அடித்த காரணத்தினால் தான் அமித்ஷாவை இங்கு வரவழைத்துள்ளனர் .பாஜகவின் எந்தவிதமான மத அரசிலும் தமிழகத்தில் எடுபடவில்லை , உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பாக உள்ளது என்று கூறினார்.தொடர்ந்து பேசியவர் தேர்தல் வாக்குறுதி தொடர்பான விவாதத்திற்கு அமித்ஷா தயாரா? மேலும் விவாதத்தை நடத்த டெல்லியிலா? சென்னையிலா? புவனேஸ்வரிலா? எங்கு வேண்டுமானலும் நான் வருகிறேன் . ஆனால் இந்தியில் மட்டும் பேசாதீர்கள் என்று ஆ ராசா சவால் விட்டு இருந்தார்.

ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.இது குறித்து தமிழிசை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராசா அவர்களே... வாக்குறுதி தொடர்பாக... தமிழக மக்களின் மனதைத்தான் மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள் பிரதிபலித்தார்கள்... முதலில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாமல் தூய்மையான அமைச்சராக வலம் வரும் அவரை விவாதத்திற்கு அழைப்பதற்கு திகாரில் இருந்த உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.. ஆனாலும் அவரை விவாதத்திற்கு அழைப்பதற்கு முன்னால் உங்கள் மனசாட்சியோடு விவாதியுங்கள்நீட் பரீட்சையை நீக்க முடியாது என்று தெரிந்தும் அப்பட்டமாக முதல் கையெழுத்து என்று பொய் சொன்னீர்களே..

முதலில் அதை விவாதியுங்கள் அடுத்து உங்கள் விவாதங்களை டாஸ்மாக் வாசலில் வைத்துக் கொள்ளுங்கள்.. டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று முதல்வர் தன் வீட்டிற்கு முன்னால் ஏன் நின்று கருப்புக்கொடி ஏந்தினார் அது என்ன ஆனது என்று விவாதியுங்கள். உங்கள் விவாதத்திற்கு பாதிக்கப்பட்ட தாய்மார்கள் காத்திருக்கிறார்கள் . அவர்களிடம் விவாதம் செய்ய உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா ?

அதே தாய்மார்களுக்கு உதவுகிறேன் என்று 100 ரூபாய் gas மானியம் கொடுப்போம் என்று சொன்னீர்களே... அவர்களிடம் சென்று அதை விவாதிக்க உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா ? என்று கேள்விஎழுப்பி உள்ளார். மேலும் ஒப்பந்தத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர்கள் ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள் என்று அந்த வாக்குறுதிகளை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள் முதலில் அவர்களிடம் சென்று உங்களால் விவாதிக்க முடியுமா...


மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து என்று சொன்ன வாக்குறுதிக்காக மாணவரிடம் சென்று முதலில் விவாதியுங்கள்.... பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருவேன் என்று நீங்கள் ஏமாற்றிய அரசு ஊழியர்களிடம் சென்று முதலில் அதைப் பற்றி விவாதிகள்.... நீங்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள் பொய் சொல்லி திரிகிறீர்கள் என்று தமிழ் மக்களுக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்... 2026 இல் தோல்வியை சந்திக்க தயாராக இருங்கள்.. என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like