பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்குகிறாரா நடிகர் அப்பாஸ்..?

90களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். ‘காதல் தேசம்’ படத்தில் மூலம் அறிமுகமான அப்பாஸுக்கு முதல் படமே நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.
அதையடுத்து பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, ஆசை தம்பி, பூவேலி படையப்பா, சுயம்வரம், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் அவர் படங்களில் நடித்து வந்தார்.
இப்படி முன்னணி நடிகராக வலம் வந்தவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதையடுத்து அமெரிக்கா சென்று அங்கு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். குடும்பத்தினருடன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
தற்போது அப்பாஸ் மீண்டும் சோசியல் மீடியாக்களில் அதிகம் காணப்படுகிறார். அவரை பற்றி நேர்காணல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இந்நிலையில் அப்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளது. தெலுங்கில் நாகர்ஜுனா தொகுத்து வழங்குகிறார். அதில் அப்பாஸ் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது