1. Home
  2. தமிழ்நாடு

குட் பேட் அக்லி டிக்கெட் விலை 500 ரூபாயா?

Q

குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது. துணிவு படமெல்லாம் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்புக் காட்சி வெளியானது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் குட் பேட் அக்லி திரைப்படம் 9 மணிக்குத்தான் வெளியாகிறது.இந்நிலையில், மதுரையில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்படமாட்டாது என்கிற பஞ்சாயத்தை விநியோகஸ்தர்கள் கிளப்பியுள்ளது அங்குள்ள அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரையில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டிக்கெட்டுகள் ஏற்கனவே மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 190 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ள நிலையில், தனி திரையரங்குகளில் காலை 9 மணி காட்சிக்கு 500 ரூபாய்க்கு டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தால் தான் படத்தை வெளியிட அனுமதிப்போம் என தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பிரச்சனை வெடித்துள்ளதாகவும் அதன் காரணமாக 9 மணி காட்சி மதுரையில் திரையிடப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்துக்கான டிக்கெட் புக்கிங் சென்னையில் சில தனி திரையரங்குகளில் இன்னமும் 9 மணிக்கான காட்சிகளை திரையரங்க நிர்வாகம் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங்கிற்காக ஓபன் செய்யவில்லை. இந்நிலையில் விடாமுயற்சி தோல்வியின் எதிரொலி அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்திற்கும் எதிரொலிக்கிறது. அஜித் ரசிகர்கள் எல்லாமே 9 மணிக்கு படத்தை பார்த்தாக வேண்டும் என முதல் காட்சியை ஹவுஸ்ஃபுல் ஆக்கியுள்ளனர். ஆனால், அதன் பின் உள்ள காட்சிகள் இன்னமும் பெரிதாக டிக்கெட் புக்கிங் ஆகவில்லை என்கின்றனர்.

Trending News

Latest News

You May Like