1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான் : விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ்..!

1

 இர்பானின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருந்த நிலையில்  துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்து  தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.

இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்  மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.இதனையடுத்து  ஜூலை மாதம் 24ம் தேதி, இர்பான் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.  அவர் தனது மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சி, குழந்தை பிறந்தவுடன் அதை கையில் ஏந்தி இருக்கும் காட்சிகளை பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்கள் 2 லட்சத்துக்கும்  அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல வேண்டும்.  முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் கத்தரிக்கோல் பிடிக்க வேண்டும்.  யூடியூபர் இர்பான் அறுவைச் சிகிச்சை அறைக்குள் வீடியோ கேமராவை எடுத்து சென்றது மட்டுமின்றி குழந்தைக்கும் தாயுக்கும் இடையே உள்ள தொப்புள்கொடியை வெட்டியதற்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


 

null

இந்நிலையில் மனைவியின் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்ஃபானுக்கு, விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து மருத்துவத்துறை நோட்டீஸ். குழந்தையின் பாலினத்தை அறியும் வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான் மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்

 

Trending News

Latest News

You May Like